ஈழ உணர்வைப் பயன்படுத்தி வெற்றிபெற்ற ஜெசிக்கா : சமூக வலைதளங்களில் சூடுபறக்கும் விவாதம்!!

790

jasikka

தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாடல் போட்டியான சுப்பர் சிங்கரில் முதன்முறையாக ஈழத்தைச் சேர்ந்த ஜெசிக்கா இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் பரிசாக அவருக்குக் கிடைத்த 1 கிலோ தங்கத்தை இந்திய மற்றும் ஈழத்தில் உள்ள அனாதைக் குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்.

ஆனால் ஜெசிக்கா ஈழ உணர்வை வைத்துத்தான் வெற்றிபெற்றார் என்றொரு கருத்தை சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இவர் தனது வெற்றிக்காக ஈழ உணர்வைப் பயன்படுத்தியதை எதிர்த்து பலர் தங்களது விமர்சனங்களை கூறியுள்ளனர். அவர்கள் தெரிவித்த சில கருத்துக்கள் வருமாறு..

போட்டியின் ஆரம்பத்தில் தமிழில் சரியாக பேச முடியாமல் நடுவராக கலந்துகொண்ட மூத்த பாடகி சித்ராவினால் ” தமிழுக்காக போராடுவதாக கூறும் உங்களுக்கு தமிழே பேசத் தெரியவில்லை.. இது பெருமையான விடயமா?” என விமர்சனத்திற்கு உள்ளானவர் ஜெசிக்கா. பின்னர் ஓரளவு தமிழை பேசக் கற்றுக் கொண்டார்.

இவர் பாடிய ஒவ்வொரு சுற்றிலும் “எக்ஸ் மச்சி வை மச்சி”, “நெஞ்சினிலே நெஞ்சினிலே”, “அட என்னாத்த சொல்வேனுங்கோ” என எல்லாவகையான இசை வடிவங்களிலும் பாடித்தான் தனது திறமையை நிருபித்துள்ளார்.

வைல்ட் காட் சுற்றில் தான் மக்களிடம் வாக்குக் கேட்டார். அப்போதும் கூட தான் ஒரு ஈழத்துப் பெண் என்று கூறி வாக்குக் கேட்கவில்லை. நான் திறமையானவர் என நீங்கள் நம்பினால் எனக்கு வாக்களியுங்கள் என்று தான் கேட்டிருந்தார்.

இறுதிப் போட்டியில் ஈழ உணர்வைக் காட்டி அனைவரினதும் உணர்வுகளைத் தூண்டி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். கனடாவிலே பிறந்து வளர்ந்த இவரால் உண்மையில் ஈழ உணர்வை வெளிப்படுத்த முடியுமா?

ஈழ உணர்வு இன்று அரசியல்வாதிகளால் மட்டுமன்றி பலரால் சுய தேவைக்காக பயன்படுத்தப்படுவது கண்டனத்திற்குரியது என பலர் தமது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.