யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் நியமனம்!!

285

ilam

யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக நீதி­ப­தி­ எம்.இளஞ்­செ­ழியன் பிர­தம நீதி­ய­ரசர் கே.சிறிபவனால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஜுன் மாதம் முத லாம் திகதி முதல் அமு­லுக்கு வரும் வகையில் இந்த நிய­மனம் செய்­யப்­பட்­டுள்­ளது.

செம்­மணி புதை­குழி வழக்கில் யாழ்ப்­பா­ணத்தில் விசேட நீதி­ப­தி­யாக நிய­மனம் செய்­யப்­பட்டு, 1999 இலி­ருந்து 2000 ஆம் ஆண்டு வரை யாழ்ப்­பா­ணத்தில் இவர் கட­மை­யாற்­றி­யி­ருந்தார்.

அதன் பின்னர் 3 வரு­டங்கள் மன்னார் மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் பின்னர் 2008 ஆம் ஆண்டு வரையிலான யுத்த காலத்தில் வவு­னியா மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் நீதி­பதி இளஞ்­செ­ழியன் கடமையாற்­றி­யி­ருந்தார்.

அத­னை­ய­டுத்து 2008 ஆம் ஆண்டு அவர் திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற ஆணை­யா­ள­ராக நியமிக்­கப்­பட்டார். திரு­கோ­ண­ம­லையில் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் கட­மை­யாற்­றிய அவர், பின்னர் கல்­மு­னைக்கு மாவட்ட நீதி­ப­தி­யாக இடம் மாற்றம் பெற்­றி­ருந்தார்.

கல்­முனை மாவட்ட நீதி­ப­தி­யாக 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் கட­மை­யாற்­றிய பின்னர், 2012 ஆம் ஆண்டு அவர் மீண்டும் திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற ஆணை­யா­ள­ராக நியமிக்கப்பட்டு அங்கு 2014 ஆம் ஆண்டு வரை மேல் நீதி­மன்ற ஆணை­யா­ள­ராகக் கடமையாற்றினார்.

அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, அவர் தற்­போது அங்கு கட­மை­யாற்றி வரு­கின்றார். இப்­போது பிர­தம நீதி­ய­ரசர் அவரை எதிர்­வரும் முதலாம் திகதி முதல் யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக நியமித்திருக்கின்றார்.

மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.