பேருந்து நடத்துனராக இருந்து ஹீரோவாக மாறிய வீரர்!!

254

Sports

ஸ்பெயினை சேர்ந்த செவிலா அணியின் நட்சத்திர வீரர் கார்லெஸ் பாக்காவின் வாழ்க்கை கதை வித்தியாசமாக உள்ளது.

நேற்று போலந்து தலைநகர் வார்சாவில் நடந்த யூரோபா லீக் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் செவிலா மற்றும் உக்ரைனின் நிப்ரோ அணிகள் மோதின.

இதில் நிப்ரோ அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4வது முறையாக கிண்ணம் வென்றது செவிலா அணி. இதில் செவிலா அணியின் நட்சத்திர வீரர் கார்லெஸ் பாக்கா 2 கோல்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

கொலம்பியாவை சேர்ந்த இவர் விளையாட வருவதற்கு முன்னர் சொந்த ஊரில் பஸ் நடத்துனராக பணியாற்றி வந்தார். கால்பந்தின் மீது ஆர்வம் கொண்டு சுற்றித் திரிந்து கொண்டிருந்த போது, 2007ஆம் ஆண்டு தனது 20வது வயதில் அத்லெடிகோ ஜுனியர் அணியில் இடம் கிடைத்தது.

இதன் பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு கார்லெஸ் பாக்காவை செவிலா அணி 7 மில்லியன் டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்தது.

ஸ்பானீஷ் லீக் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடுத்தவர்கள் வரிசையில் ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் கார்லெஸ் பாக்கா இடம்பிடித்துள்ளார்.