வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய தொழில்நுட்ப ஆய்வுகூடம் கல்வி இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு!!(படங்கள்)

462

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் பொ.இராதாகிருஸ்ணன் நேற்று (23.06) திறந்து வைத்தார்.

கல்வி அமைச்சின் 1000 பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்த புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த நிலையில் இத் தொழில்நுட்ப ஆய்வு கூடமும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

அதேவேளை இசுறு பாடசாலை திட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று மாடி பாடசாலை கட்டிடத் தொகுதியையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

பாடசாலை அதிபர் த. அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராஜா, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், வவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

11 1612 13 14 15