பிலிம்பேர் விருது வென்றவர்கள் விபரம் வெளியீடு : கத்தி திரைப்படத்துக்கு 3 விருதுகள்!!

233

Filmfare

62வது பிலிம்பேர் விருதை வென்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கத்தி திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடன இயக்குனர் ஆகிய விருதுகளுக்கு இந்த படம் தேர்வாகியுள்ளது.

மேலும், தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், அனிருத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மெட்ராஸ் படத்தில் சிறப்பாக நடித்த ரித்விகாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜிகர்தண்டா படத்தில் அதிரடி வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குக்கூ படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்த மாளவிகா நாயர் சிறந்த நடிகை விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

பிலிம்பேர் விருது வென்றவர்களின் முழுப் பட்டியல்

சிறந்த படம் – கத்தி

சிறந்த இயக்குனர் – ஏ.ஆர்.முருகதாஸ் (கத்தி)

சிறந்த நடிகர் – தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த நடிகை – மாளவிகா நாயர் (குக்கூ)

சிறந்த துணை நடிகை – ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த துணை நடிகர் – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)

சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (அழகே அழகே – சைவம்)

சிறந்த பின்னணி பாடகர் – பிரதீப் குமார் (ஆகாயம் தீப்பிடிச்சா – மெட்ராஸ்)

சிறந்த பின்னணி பாடகி – உத்ரா உன்னிகிருஷ்ணன் (அழகே அழேகே – சைவம்)

சிறந்த நடன கலைஞர் – ஷோபி (செல்பிபுள்ள – கத்தி)

சிறந்த ஒளிப்பதிவாளர் – பி.எஸ்.வினோத் (மனம்)