வவுனியாவில் பாடசாலை மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!!(படங்கள்)

1398

1

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி மாணவி நேற்று (06.08.2015) கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இம்முறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவியே வேப்பங்குளம் பகுதியில் உள்ள குறித்த மாணவியின் வீட்டுக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர் கு.திவ்வியா என்ற மாணவியாவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது..

குறித்த மாணவி கல்விப் பொதுசாதாரண தரப் பரீட்சையில் கணிதபாட பெறுபேறு அற்ற நிலையில் குறித்த பாடசாலையில் உயர்தரம் சென்றுள்ளார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சை தேற்றுவதற்கான அனுமதி அட்டை வந்த போதும் பாடசாலையில் அனுமதி அட்டை வழங்கப்படவில்லை எனவும் அதன் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்வதாக குறித்த மாணவி கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பிராந்திய செய்தியாளர்-

2 3