வவுனியாவில் மாணவியின் இறுதி ஊர்வலத்தில் பொலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகலால் பதற்றம்!!(படங்கள்)

1375

வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட விபுலானந்தா கல்லூரி மாணவி குணசேகரம் திவ்யாவின் இறுதிக் கிரிகைகள் இன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்று வருகின்றன.

சமயக் கிரிகைகளின் பின்னர் மாணவியின் உடலை மாணவர்கள் ஊர்வலமாக மாணவி கல்வி கற்ற பாடசாலையான விபுலானந்தா கல்லூரிக்கு முன்னால் கொண்டு செல்ல முயன்றனர்.

நீதமன்ற உத்தரவிற்கு அமைய பாடசாலைக்கு மாணவியின் உடலைக் கொண்டு செல்ல முடியாது என பொலிசார் தெரிவித்தனர்.

இறுதிச் சடங்கு நடக்கும் வேலையில் மாணவர்கள் மாணவியின் உடலை அவர் படித்த பாடசாலைக்கு முன்பாக கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதனால் பொலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை உருவானது. மாணவர்கள் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் அவ்விடத்தில் பதற்ற நிலை உருவானது.

இறுதியில் மாணவர்களினால் மாணவியின் உடல் பாடசாலைக்கு முன்பாக கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பாடசாலையைச் சுற்றி நூற்றுக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றநிலை நிலவுகின்றது.

முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

-பிராந்திய செய்தியாளர்-

1 2 3 4 5 6 7 8 9 10