வவுனியா சிதம்பரபுரம் யாத்திரிகர் மலை ஈழத்து பழனி முருகன் ஆலய தீர்த்தோற்சவமும் கொடியிறக்கமும் (படங்கள் காணொளி)

486

வவுனியா சிதம்பரபுரம் யாத்திரிகர்  மலையில் அமைந்துள்ள ஈழத்து பழனி என அடியார்களால் அழைக்கப்படும் திருப்பழனி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ அலங்கார பெருவிழா 14.08.2015 அன்று கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகி பதினாறாம் நாளான இன்று29.08.2015 சனிக்கிழமை  தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்க வைபவம்   ஆகியன  இடம்பெற்றன.

மேற்படி உற்சவம்  ஆலய பிரதமகுரு சிவாச்சாரிய திலகம் சிவஸ்ரீ சிவசங்கர குருக்ககள் மற்றும்  சி .ஸ்ரீ .சங்கரசர்மா தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு அஷ்டோத்ர(108) சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து  தீபாராதனைகள் மற்றும் மந்திர உச்சாடனங்களுடன் கூடிய வழிபாடு இடம்பெற்று மதியம் 1.00 மணியளவில் வள்ளி தெய்வயானை சமேத முருகபெருமான் வசந்தமண்டபத்தில் எழுந்தருளி  வசந்த மண்டப பூஜை இடம்பெற்று தொடர்து  எம்பெருமான் முருகபெருமான் ஆலய முன்றலில் தீர்த்தமாடி கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்று வள்ளி தெய்வயானை சமேத முருகபெருமான் வெளிவீதி  வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்த நிகழ்வு இடம்பெற்றது .

நிறைவில் மகோற்சவ காலத்தில் உதவிகள் திருப்பணிகள் புரிந்த  அந்தணர் பெருமக்களான  ஆலய பிரதமகுரு சிவாச்சாரிய திலகம் சிவ ஸ்ரீ சிவசங்கர குருக்ககள் மற்றும் ஆலயம் தொடர்பாக முதன் முதலில் ஈழத்து பழனி  என்னும் ஆலய ஆலய வரலாறு தொடர்பான  நூலினை தொகுத்து வழங்கிய  சி .ஸ்ரீ .சங்கரசர்மா  ஆகியோர்  பொன்னாடைபோர்த்தியும் வாழ்த்துமடல் வழங்கப்பட்டும்  கௌரவிக்கப்பட்டனர். மற்றும் உற்சவகாலத்தில் சரியை தொண்டாற்றிய தொண்டர்கள் மற்றும் முன்மாதிரியாக செயல்பட்ட சிறுவர்கள்ஆகியோர் ஆலய பரிபாலன சபையினரால் கௌரவிக்கபட்டனர்.

வவுனியா நெற்  பிரதேச நிகழ்வுகளுக்காக  கஜன்

20150829_100338 20150829_101238 20150829_105912 20150829_110021 20150829_114043 20150829_115313 20150829_115931 20150829_121757 20150829_130818 20150829_130908 20150829_131640 20150829_132645 20150829_132744 20150829_132756 20150829_132758 20150829_133006 20150829_133403 20150829_133444 20150829_133524 20150829_133856 20150829_133908 20150829_134638 20150829_134904 20150829_135313 20150829_140651 20150829_141706 20150829_141806 20150829_141852