அமைச்­சர்கள் எண்­ணிக்கை : அனு­ம­தியை கோரும் விசேட பாரா­ளு­மன்ற அமர்வு இன்று!!

290

1468662708618031616parliment02தேசிய அர­சாங்­கத்தின் புதிய அமைச்­சர்கள் நாளை வெள்­ளிக்­கி­ழமை பத­வி­யேற்­பார்கள் எனத் தெரி­வித்த சபை முதல்­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல அமைச்­சர்கள் எண்­ணிக்கை தொடர்பில் பாரா­ளு­மன்ற அனு­ம­தியை கோரும் விசேட பாரா­ளு­மன்ற அமர்வு இன்று இடம்­பெற்­றுள்­ளது என்றும் தெரி­வித்தார்.

சபை முதல்­வ­ராக தெரி­வான லக் ஷ்மன் கிரி­யெல்ல எம்.பி. நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உள்ள தனது அலு­வ­ல­கத்தின் கட­மை­களை பொறுப்­பேற்ற பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்; முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் அமைச்­சர்­களின் எண்­ணிக்கை தன்­னிச்­சை­யா­கவே அதி­க­ரிக்­கப்­பட்­டது. பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி கோரப்­ப­ட­வில்லை.

ஆனால் எமது ஆட்­சியில் 19ஆவது திருத்தம் நிறை­வேற்­றப்­பட்டு அதற்­க­மைய தேசிய அரசில் அமைச்­சர்­களின் எண்­ணிக்கை தொடர்­பாக பாரா­ளு­மன்ற அனு­மதி கோரப்­ப­ட­வுள்­ளது. அதற்­கா­கவே இன்று பாரா­ளு­மன்றமும் விசேட அமர்வு இடம்­பெ­று­கின்­றது.

புதிய அரசின் அமைச்­சர்கள் பத­வி­யேற்பு நாளை வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெறும்.

ஐ.தே.முன்­னணி சார்பில் அமைச்­சர்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரிவு செய்வார். அதே­போன்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி சார்ந்த அமைச்­சர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன தெரிவு செய்வார்.

அமைச்சர்களின் எண்ணிக்கை எவ்வாறு எனக்கூற முடியாதென்றும் லக் ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்தார்.