தென்னாபிரிக்காவில் கொமன்வெல்த் போட்டிகள்!!

284

commonwealthஇங்­கி­லாந்தின் காலனி ஆதிக்­கத்­திற்கு உட்­பட்­டி­ருந்த நாடுக­ளுக்­கி­டையே 4 வரு­டங்களிற்கு ஒரு முறை கொமன் வெல்த் போட்டி நடத்­தப்­படும். இந்த போட்­டியை இங்­கி­லாந்து மன்னர் குடும்­பத்தைச் சேர்ந்த ஒருவர் தொடங்கி வைப்பார்.

அடுத்த கொமன்வெல்த் போட்டி 2018-ஆம் ஆண்டு அவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடை­பெ­று­கி­றது. அதன்பின் 2022-ஆம் ஆண்டு போட்­டியை நடத்தும் நகரை தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான கொமன்வெல்த் கூட்­ட­மைப்பின் பொதுக்­கூட்டம் நேற்று நியூ­ஸி­லாந்தில் நடை­பெற்­றது.

இதில் தென்­னா­பி­ரிக்­காவின் கடற்­கரை பகு­தி­யான டர்பன் நகர் இப்­போட்­டியை நடத்­து­வ­தற்கு தகு­தி­பெற்­றது. டர்­ப­னுடன் கன­டாவின் எட்­மோன்டன் நகரும் போட்­டியில் இடம் பெற்­றி­ருந்­தது.

கடந்த பெப்­ர­வரி மாதம் எண்ணெய் விலை கணி­ச­மாக குறைந்­ததால் அந்த நகர் போட்­டியில் இருந்து வில­கி­யது. இதனால் தென்­னா­பி­ரிக்­காவின் டர்பன் நகர் போட்­டி­யின்றி ஒரு­ம­ன­தாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டது.

1930ஆ-ம் ஆண்டு முதல் கொமன்வெல்த் போட்­டிகள் நடை­பெற்று வருகி­றன. ஆனால் கொமன்வெல்த் போட்டியை நடத்தும் வாய்ப்பு இப்போதுதான் முதன் முறையாக தென்னாபிரிக்காவிற்கு கிடைத்துள்ளது.