ஹெல்மெட் வாங்கினால்தான் இரு சக்கர வாகனம் வாங்கமுடியும்!!

338

Pink-Stylish-Womens-Motorcycle-Helmetsஆந்திராவில் இரு சக்கர வாகனம் ஒட்டுபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று பொலிசார் உத்தரவிட்டனர். கடந்த ஜூன் 1–ம் திகதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. என்றாலும் பலர் இதனை கடைபிடிப்பதில்லை.

இதையடுத்து தலைக்கவசம் அணிவதை தீவிரமாக்குவது குறித்து போக்குவரத்து துறை கமிஷனர் பாலசுப்பிரமணியம் 13 மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கடப்பா உட்பட சில மாவட்டங்களில் தலைக்கவசத்திற்கு தட்டுப்பாடு நிலவியதாக அதிகாரிகள் கூறினார்கள்.

இந்த தட்டுப்பாடு நீக்கும் படி அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். மேலும் இரு சக்கர வாகனம் விற்கும் நிறுவனங்கள் வண்டியுடன் கட்டாயம் தலைக்கவசம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தலைக்கவசம் வாங்கினால் தான் இரு சக்கர வாகனத்தை பதிவு (ரிஜிஸ்ட்ரேஷன்) செய்ய வேண்டும் என்று அனைத்து போக்குவரத்து துறை அலுவலகங்களும் உத்தரவு பிறப்பித்தார்.

வருகிற 7–ம் திகதி முதல் இதனை கட்டாயம் அமுல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

அதோடு போக்குவரத்து பொலிசாரும், ஊழியர்களும் இரு சக்கர வாகனம் பயன்படுத்தினால் அவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியவில்லையாயின் அன்றைய தினம் ஆப்சென்ட் போட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.