சம்பந்தன் எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் நாட்டில் இனவாதம் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது- டிலான் பெரேரா!!

283

dilan perera_1தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டதன் மூலம் இந்­நாட்டில் இன­வாதம் அழித்­தொ­ழிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அது மாத்­தி­ர­மின்றி இரத்தம் சிந்­தாது ஏற்­ப­டுத்­தப்­பட்ட புரட்­சியின் வெற்­றி­யா­கவே இதனை பார்க்­கின்றேன். எனவே அவருக்கும் குழுக்­களின் பிரதித் தலை­வ­ராக பத­வி­யேற்­றுள்ள செல்வம் அடைக்­க­ல­நா­த­னுக்கும் மனப்­பூர்­வ­மான வாழ்த்­துக்­களை தெரி­வித்துக் கொள்­கின்றேன் என்று ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் எம்.பி.யான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற அமைச்­ச­ரவை எண்ணிக்கை அதி­க­ரிப்பு தொடர்­பான பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தாடி வளர்த்த சிலர் இன்னும் இந்த சபையில் இருந்து இன­வா­தத்தை பரப்பிக் கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனாலும் இன­வா­தத்­திற்கு எதி­ராக போரா­டிய இரா.சம்­பந்தன் இன்று எதிர்க்­கட்சித் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடி­யா­த­வர்­களே இன்று கொதித்துப் போயுள்­ளனர். எதிர்க்­கட்சி தலைவர் பதவி சம்­பந்­த­னுகே செல்ல வேண்டும் என்று ஒரு­வா­ரத்­திற்கு முன்­னரே நான் எண்ணம் கொன்­டி­ருந்தேன். எனது எண்­ணமும் பிரார்த்­த­னையும் நிறை­வே­றி­யுள்­ளது. இதனால் நான் ஆனந்தக் கண்ணீர் விடு­கின்றேன்.

குழுக்­களின் பிரதித் தலை­வ­ரா­கவும் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வா­கி­யுள்ளார். அதே­போன்று எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசா நாயக்க தெரி­வா­கி­யுள்ளார். இது குறித்து நாம் பெரு­மைப்­பட வேண்டும். நாட்டை முன்­னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கம் ஜனா­தி­பதி மைத்­திரி பால­சி­றி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் உள்­ளது. இன்று இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­துள்­ளன. இத­னையே நாட்டு மக்கள் எதிர்பார்த்­தி­ருந்­தனர் அது இன்று இடம்­பெற்­றுள்­ளது.

எனினும் சுதந்­திரக் கட்­சியை சாராத சிலர் இன்னும் இன­வா­தத்தை பரப்ப முற்­ப­டு­கின்­றனர். நாட்டு மக்கள் இன­வா­தத்தை முறி­ய­டித்து விட்­டனர். சுதந்­திரக் கட்­சியை அல்­லா­த­வர்கள் எவரும் எமது கட்சி பற்றி பேச வேண்­டிய தேவை இனியும் கிடை­யாது.

இன்று எமது நாட்டில் எழுந்­துள்ள முன்­னேற்­ற­க­ர­மான நிலை­மையை சர்­வ­தேசம் உற்று நோக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. எமது இத் திட்டம் எப்போது சீரழியும் என்று ஒரு கூட்டத்தினர் எதிர்பார்த்திருக்கின்றனர். எனவே ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து இந்த பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்போம் என்றார்.