மாணவர்களை கைது செய்யும்போது பொலிசார் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும்- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்!!

337

5d4fdF

நாட்டில் இடம்­பெறும் துஷ்­பி­ர­யோ­கங்கள் மற்றும் மோச­மான நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக சந்­தே­கத்தின் பேரில் மாண­வர்­களை கைது செய்­யும்­போது பொலிஸார் மிகுந்த பொறுப்­புடன் அவர்­களின் எதிர்­காலம் குறித்து சிந்­தித்து செயற்­பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்சர் சந்­தி­ராணி பண்­டா­ர­நா­யக்க தெரி­வித்தார்.

“சிறு­வர்­க­ளுக்கு நட்­பு­ற­வான சூழல் உலகை மிளிரச் செய்யும் அழ­கிய தேசம்” எனும் தொனிப் பொருளில் நேற்று முன்தினம் யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடை­பெற்ற தேசிய சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

இங்கு தொடர்ந்தும் அவர் உரை­யாற்­று­கையில்,

2015 ஆம் ஆண்­டுக்­கான தேசிய சிறுவர் தின நிகழ்வை சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் மாவட்­டத்தில் நடை­பெ­று­வ­தை­யிட்டு நான் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். அத்­துடன் இந்த நிகழ்ச்­சியை ஒழுங்கு செய்ய உத­விய அமைச்­சுக்­களின் அதி­கா­ரிகள் மற்றும் ஊழி­யர்­க­ளுக்கு எனது நன்­றியைத் தெரி­விக்­கின்றேன்.

இந்த தேசிய நிகழ்­விற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல ­சி­றி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய இரு­வரும் கலந்­து­கொள்ள இருந்­த­போதும் உத்­தி­யோ­க­பூர்வ கடமை கார­ண­மாக சமு­க­ம­ளிக்­க­வில்லை. இருந்­த­போதும் அவர்கள் தங்­களது பங்­க­ளிப்பை வழங்­கினர்.

மேலும் வறுமை ஒழிப்புக் கோட்டின் கீழ் வாழும் சிறு­வர்­களின் எதிர்­காலம், பரா­ம­ரிப்பு, பாது­காப்பு மற்றும் உரி­மைகள் இவற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எமது அமைச்சு மேற்­கொண்டு வரு­கின்­றது.

அத்­துடன் மதத் தலை­வர்கள், சமு­தாயத் தலை­வர்கள் சிறுவர் உரிமை குறித்து விழிப்­பு­ணர்­வுகளை ஏற்­ப­டுத்த வேண்டும். இலங்­கையில் சிறு­வர்­களின் எழுத்­த­றிவு வீதம் உயர்ந்த மட்­டத்தில் இருப்­பது சிறப்­பம்­ச­மாகும். பெற்றோர், ஆசி­ரியர்கள் சிறு­வர்கள் குறித்­து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்­கான வழி­வ­கை­க­ளையும் நட­வ­டிக்­கை­க­ளையும் நாங்கள் ஏற்­ப­டுத்­துவோம்.

சிறு­வர்கள் மீது துஷ்­பி­ர­யோ­கங்கள் மற்றும் மோச­மான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டால் அச் சம்­ப­வங்­களை ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்­தும்­போது பொறுப்­புடன் அவற்றை வெளிப்­ப­டுத்த வேண்டும். அத்­துடன் பொலிஸார் மற்றும் நீதித்­துறை கட­மை­களை மேற்­கொள்வோர் இது குறித்து அதி­க­ள­வி­லான கவனம் செலுத்த வேண்டும்.

சிறுவர் பாது­காப்பு குறித்து பொலி­ஸாரின் கடமை அளப்­ப­ரி­யது. அவர்­களும் இந்த சமூ­கத்­திற்கு விழிப்­பு­ணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் நாட்டில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் மற்றும் மோசமான நடவடிக்கைகள் காரணமாக சந்தேகத்தின் பேரில் மாணவர்களை கைது செய்யும்போது பொலிஸார் இது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.