மூக்குக்குப் பதிலாக குழாயுருவான கட்டமைப்புடன் பிறந்த குழந்தை!!

468

baby_17மூக்­கிற்கு பதி­லாக முகத்தில் இரு குழாய் போன்ற கட்டமைப்பு­க­ளுடன் அதி­சய குழந்­தை­யொன்று பெருவில் பிறந்­துள்­ளது.பெரு­வின் தலை­நகர் லிமா­வி­லி­ருந்து 300 மைல் தொலைவில் சிம்பொத் நக­ரி­லுள்ள டெல் நினோ மருத்­து­வ­ம­னையில் லொறினா ரொட்­றி­குயஸ் ஸவ­லெதா (20 வயது) என்ற பெண்­ணுக்குப் பிறந்த இந்தக் குழந்தை ஆரோக்­கிய நிலையில் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேற்­படி குழந்­தைக்கு ஏற்பட்ட பதாயு நோய் அறி­குறி என அழைக்­கப்­படும் மரபு ரீதி­யான பாதிப்புக் கார­ண­மா­கவே இவ்­வாறு குழாய் உருவில் மூக்கு உரு­வா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.இவ்­வா­றான மர­பணு பாதிப்பு 15,000 குழந்தைகளுக்கு ஒன்றென நிகழும் அபூர்வ நிகழ்வாகும்.