மாணவி வித்தியா, சிறுமி சேயா கொலைக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை உடன் நிறைவேற்றக்கோரி யாழிலிருந்து கொழும்புக்கு பாத யாத்திரிரை!

1269
death_fanlty-720x480

புங்குடுதீவு மாணவி வித்தியா, கொட்டதெனியாவை சேர்ந்த சிறுமி சேயா ஆகியோர் பாலியல் துன்புறுத் தல்களின் பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித் தும் குற்றவாளிகளுக்கு எதிராக மரணதண்டனை நிறைவேற்றக்கோரியும் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண ஊழியர்களால் யாழிலிருந்து கொழும்பு வரையான பாத யாத்திரை ஒன்று நடத்தப் படவுள்ளதாக இ.போ.ச. யாழ்.சாலை முகாமையா ளர் செ.குணபாலசெல்வம் அறிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண ஊழியர்களால் நடத்தப்படவு ள்ள இந்த பாத யாத்திரை நாளை 5 ஆம் திகதி திங்கட் கிழமை காலை 6.30 மணி க்கு யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கொழு ம்பு நோக்கி ஆரம்பமாகவுள்ளது.

இப் பாத யாத்திரையின் விபரம் முறையே,நாளை 5 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலி ருந்து கிளிநொச்சி வரை யும், 6 ஆம் திகதி கிளிநொச்சியிலி ருந்து வவுனியா வரையும், 7 ஆம் திகதி வவுனியாவி லிருந்து அநுராதபுரம் வரை யும்,8 ஆம் திகதி அநு ராதபுரத்திலிருந்து மாகோ வரையும்,9 ஆம் திகதி மாகோவாவிலிருந்து குரு நாகல வரையும், 10 ஆம் திகதி குருநாகலிலிருந்து வறாக்காப்பொல வரையும், 11 ஆம் திகதி வறாக்காப் பொல விலிருந்து கம்பகா வரை யும்,12 ஆம் திகதி கம்பகா விலிருந்து கொழும்பு வரை யும் இப் பாதயாத்திரை சென்றடையவுள்ளது.

இந்த பாதயாத்திரையில் சமூக அக்கறை கொண்ட அனைவரும் கலந்து கொள் ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.