பாலியல் வன்கொடுமை செய்த படையினருக்கு 20 வருட தண்டனை : நீதிபதி இளஞ்செழியன் அதிரடி!!

359

ilancheliyan

இலங்கையில் முதல் முறையாக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இராணுவ வீரர்கள் நால்வர் குற்றாவளியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி விஸ்வமடு பகுதியில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14 ஆம் திகதி யுவதியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கிலேயே யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம் இளஞ்செழியன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

யுவதியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை தொடர்பில் நால்வர் மீது குற்றஞ்சாட்டப்பட்டதுடன், ஒருவர் தலைமறைவாகிய நிலையில் ஏனைய மூவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

யுவதியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமைக்காக குற்றவாளிகளுக்கு தலா 20 வருட சிறைத்தண்டனையும் ஐந்து இலட்சம் ரூபா அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மற்றுமொரு வயோதிப் பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமைக்காக இந்த நான்கு குற்றவாளிகளுக்கும் தலா ஐந்து வருட சிறைத்தண்டனையையும் ஒரு இலட்சம் ரூபா அபாராதமும் விதித்து நீதிபதி எம் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் குற்றவாளிகள் மேலும் ஐந்தாண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய வழக்கு விசாரணைகளின் போது குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட இராணுவ வீரர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.