பொடி பில்டிங் கங்காரு – பார்த்தால் அசந்துருவீங்க பாருங்க!!

507

2

கட்­டு­மஸ்­தான தசை­க­ளுடன் காணப்­படும் கங்­காரு ஒன்று இணை­யத்தை கலக்கி வரு­கி­றது. ரொஜர் எனப் பெய­ரி­டப்­பட்ட இந்த கங்­காரு மனித பொடி­பில்­டர்­களைப் போன்று காணப்­ப­டு­கி­றது. 2006 ஆம் ஆண்டு சிறு குட்­டி­யாக இருந்த ரொஜர், அதன் தாய் இறந்த பின்னர் அவுஸ்­தி­ரே­லி­யாவின் வட­ பி­ராந்­திய நக­ர­ரொன்றில் வீதி ஓரத்தில் அநா­தை­யாகக் கிடந்த நிலையில் மீட்­கப்­பட்டு வன­வி­லங்கு சர­ணா­ல­ய­மொன்­றுக்கு அனுப்­பப்­பட்­டது.

இப்­போது 7 அடி உய­ர­மாக வளர்ந்­துள்ள இக்­ கங்­காரு உருண்டு திரண்ட தசை­களைக் கொண்­டுள்­ளது. சுமார் 90 கிலோ எடையைக் கொண்­டுள்ள இக் கங்­காரு, பல்­வேறு வித­மாக புகைப்­ப­டங்­க­ளுக்கு போஸ் கொடுத்­துள்­ளது. இப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஏராளமானோரை கவர்ந்துள்ளன.