ஆசிரியர் தெரிவில் வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளிகளினால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும் வடமாகாண பட்டதாரிகள் சமூகம் கோரிக்கை!

311

north-pattatharihal3

வட­மா­காண பொதுச்­சேவை ஆணைக்­கு­ழு­வினால் வட­மா­காணப் பாட­சா­லை­களில் நிலவும் ஆசி­ரிய வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­காக நடத்­தப்­பட்ட பரீட்­சை­யை­ய­டுத்து வெளி­யி­டப்­பட்ட வெட்­டுப்­புள்­ளிகள் மற்றும் நேர்­முகப் பரீட்சை தொடர்­பாக விண்­ணப்­ப­தா­ரி­க­ளான பட்­ட­தா­ரிகள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு வழங்­கக்­கோரி வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்கி­னேஸ்­வரன், வட­மாகாண ஆளுநர் ப­ளி­ஹக்கார உட்­பட வட­மா­காண­சபை உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் வட­மா­காண வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் சமூ­கத்­தினால் கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

வட­மா­காண பொதுச்­சேவை ஆணைக்­கு­ழு­வினால் வட­மா­காணப் பாட­சா­லை­க­ளுக்கு ஆசி­ரியர் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­காக கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் திக­தி­யன்று பட்­ட­தா­ரி­க­ளுக்­கி­டையே போட்டிப் பரீட்சை இடம்­பெற்­றது. இதனைத் தொடர்ந்து வெளி­யி­டப்­பட்ட வெட்­டுப்­புள்ளி மற்றும் நேர்­முகப் பரீட்சை தொடர்­பா­கவும் விண்­ணப்­ப­தா­ரி­க­ளா­கிய பட்­ட­தா­ரிகள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தி நியாயம் கோரு­வ­தற்­காக இக்­க­டி­தத்­தினைத் தங்­க­ளுக்குச் சமர்ப்­பிக்­கின்றோம்.

வட­மா­காணப் பாட­சா­லை­களில் நிலவும் இலங்கை ஆசி­ரிய சேவையின் 3 ஆம் வகுப்பு-1(அ) தரப் பதவி வெற்­றி­டங்­க­ளுக்கு பட்­ட­தா­ரி­களை ஆட்­சேர்ப்புச் செய்­வ­தற்­காக வட­மா­காணம் முழு­வதும் நடத்­தப்­பட்ட போட்டிப் பரீட்­சையில் மாவட்ட ரீதி­யி­லான வெட்­டுப்­புள்­ளிகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

இத்­த­கைய வெட்­டுப்­புள்­ளிகள் ஒரே பட்டத் தகு­தி­களைப் பெற்ற மேற்­படி பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த பட்­ட­தா­ரி­க­ளி­டையே மன உளைச்­ச­லினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஏனெனில் யாழ்ப்­பாண மாவட்­டத்­திற்கு 117, வவு­னியா மாவட்­டத்­திற்கு 95, கிளி­நொச்சி மாவட்­டத்­திற்கு 84, மன்னார் மாவட்­டத்­திற்கு 81, முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்கு 80 என வேறு­பட்ட வகையில் வெட்­டுப்­புள்ளிகள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. இதில் யாழ்ப்­பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்­டங்­களில் போட்­டிப்­ப­ரீட்­சையில் இரு பாடங்­க­ளிலும் (நுண்­ண­றிவுப் பரீட்சை, பொது அறிவு) 40 புள்­ளி­க­ளுக்கு மேற்­பட்ட புள்­ளி­களைப் பெற்ற அனை­வரும் நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு அழைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இதனால் மேற்­படி பரீட்­சையில் இரு பாடங்­க­ளிலும் 40 புள்­ளி­க­ளுக்கு மேற்­பட்ட புள்­ளி­களைப் பெற்றும் 117 வெட்­டுப்­புள்ளி இலக்­கி­னை­ய­டை­யாத யாழ். மாவட்­டத்­தினைச் சேர்ந்த பட்­ட­தா­ரிகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வெட்­டுப்­புள்ளி அறி­மு­க­மா­னது க.பொ.த உயர்­தரம், ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரீட்­சையின் உள்­வாங்­கலில் ஏற்­றுக்­கொள்­ள­மு­டியும். ஏனெனில் மாவட்­டங்­களின் மாண­வர்­க­ளு­டைய விகி­தா­சாரம் மற்றும் கற்­ற­லுக்­கான பௌதீ­க­வ­ளச்­சூழல் என்­ப­வற்­றினை அடிப்­ப­டை­யாகக் கொண்டே தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றன.

ஆனால் ஆசி­ரியர் நிய­ம­னத்­திற்­கான போட்­டிப்­ப­ரீட்சை எழு­திய பட்­ட­தா­ரி­களைப் பொறுத்­த­வரை பெரும்­பா­லானோர் ஒரே பல்­க­லைக்­க­ழ­கத்தில் குறிப்­பிட்ட பாடங்­களை ஒரே சூழ­லி­லேயே கற்­றுள்­ளனர். இது இவ்­வாறு இருக்க மாவட்­டங்­க­ளுக்­கெனத் தனித்­த­னி­யாக வெட்­டுப்­புள்­ளிகள் வெளி­யி­டப்­பட்­டமை எந்­த­வ­கையில் நியா­ய­மாகும்? குறிப்­பாக பிற மாவட்­டத்தில் 80 புள்­ளிகள் பெற்ற ஒருவர் நேர்­முகப் பரீட்­சைக்கு அழைக்­கப்­பட்­டி­ருக்க யாழ்ப்­பா­ணத்தில் 116 புள்­ளிகள் பெற்­றவர் தட்­டிக்­க­ழிக்­கப்­ப­டு­வது எவ்­வ­கையில் அறி­வு­பூர்­வ­மா­னது?

போட்­டிப்­ப­ரீட்­சையில் பெற்­றுக்­கொண்ட புள்­ளி­களின் முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் விண்­ணப்­ப­தா­ரி­களை உள்­ளீர்ப்­ப­தற்­காகப் பரீட்­சை­யினை நடத்­தி­விட்டு இவ்­வா­றான குறை­பா­டு­க­ளு­டைய வெட்­டுப்­புள்ளி அறி­மு­க­மா­னது போட்­டிப்­ப­ரீட்­சையைக் கேலிக்­கூத்­தாக்கும் செயலாய் அமை­கின்­றது. பிற மாகா­ணங்­களில் இவ்­வா­றான பிரி­வி­னைகள் காட்­டப்­ப­டு­வ­து­மில்லை. வட­மா­கா­ணத்தில் இது­வரை நடத்­தப்­பட்ட போட்­டிப்­ப­ரீட்­சையில் இத்­த­கைய முறை பின்­பற்­றப்­பட்­டி­ருக்­க­வு­மில்லை என்­பதும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

எனவே அனைத்து மாவட்­டங்­க­ளுக்கும் ஒரே வெட்­டுப்­புள்­ளி­யினை அறி­மு­கப்­ப­டுத்­த­வேண்டும் அல்­லது சித்­தி­ய­டைந்த அனை­வ­ரையும் நேர்­முகத் தேர்­வுக்கு அழைத்துத் தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கு நிய­மனம் வழங்­க­வேண்டும்.

மேலும் வட­மா­காணப் பொதுச்­சேவை ஆணைக்­கு­ழு­வினால் கோரப்­பட்ட மேற்­படி பத­விக்­கான போட்­டிப்­ப­ரீட்சை விண்­ணப்­பப்ப­டிவ விளம்­ப­ரத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பந்தி 2.2 இன் படி இது இட­மாற்­றத்­திற்­கு­ரிய சேவை­யாகும். இந்­நி­ய­மனம் பெறு­ப­வர்கள் வடக்கு மாகாணத்தின் எப்பாகத்திலும் சேவையாற்றத் தயாராக இருத்தல் வேண்டும் எனவும் பந்தி 2.3 இன் படி ஒரு சேவை நிலையத்தில் நியமனம் பெறும் ஆசிரியர், அதே சேவைநிலையத்தில் ஆகக் குறைந்தது 06 வருடங்கள் தொடர்ச்சியாக சேவையாற்ற வேண்டும் என்பது கட்டாயசேவை நிபந்தனையாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பொருத்தமான பட்டதாரிகளை குறி-த்த நியமனங்களுக்குள் உள்ளீர்க்க வேண்டு-மெனக் கேட்டுக்கொள்வதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதியன்று நடை-பெறவுள்ள நேர்-மு-கப்பரீட்சைக்கு முன்னர் தீர்வி-னைப் பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்ட-வர்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்ப-ட்டுள்ளது.