வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் புரட்சிகர ஐக்கிய மேதினம்!!

818

notis - 1

உலகத் தொழிலாளர்களினதும், விவசாயிகளினதும் தினமாக மே தினம் நினைவுகூறப்பட்டு வருகின்றது.

வருடா வருடம் மேதினம் வவுனியாவில் உழைக்கும் மக்களின் பிரச்சனைகளையும் கோரிக்கைகளையும் முன்னிறுத்தி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மே தினத்தை நினைவுகூர்ந்து வருகின்றது.

அந்த அடிப்படையில் எமது கட்சி தமிழ் தேசிய இனத்தின் மிக முக்கியமான பிரச்சனைகளாக புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப்பிரச்சனைக்கு சுய நிர்ணய அடிப்படையில் தீர்வை முன்வை என்பதை வலியுறுத்துவதுடன் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், காணாமல் போனோருக்கு பதில்கூறு,

இராணுவத்தால் சுவீகரிக்கப்படும் நில ஆக்கிரமிப்பை உடனே நிறுத்து, உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து இராணுவமே வெளியேறு, திருமலையில் சம்பூர் அனல் மின்நிலையத்தை அமைப்பதை உடனே நிறுத்து என்பவற்றை கோரிக்கைகளாக முன்னிறுத்தி இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி முன்பாக இருந்து காலை 9.30 மணிக்கு ஆர்ப்பாட்டப் பேரணி தொடங்கப்பட்டு காலை 10.30 மணிக்கு நகரசபை புதிய கலாசார மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

இவ் ஐக்கிய மேதினத்தில் பத்திற்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் பங்கேற்கின்றன. இவ் மேதின ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலும் அதன்பின் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் பொது அமைப்புக்களையும் பங்கெடுத்து மேதின கோரிக்கைகளை வலுவூட்டுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னிப் பிராந்திய செயலாளர் என்.பிரதீபன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்.பிரதீபன்
வன்னிப் பிராந்திய செயலாளர்.

notis - 1 Notis - 2