இன்று குருபூசை தினம் திருநாவுக்கரசு நாயனார் வரலாறு !!

1261
திருநாவுக்கரசு நாயனார் (வாகீசர் பெருமான்)
“திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட 
திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்.”
 
“சைவமும் தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர். புறச் சமய(சமணம்,பவுத்தம்) இருளை நீக்கிய வேளாளர்.”
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.
நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்..
“மேவுற்ற இவ்வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் 
பாவுற்றலர் செந்தமிழின் சொல்வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால் 
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நன்னாமம் நயப்புற மன்னுக என்று 
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒருவாய்மை எழுந்ததுவே.”


பாடல் விளக்கம்:-

பொருந்திய அவ்வமையத்தில், சிறப்பால் மிக்க திருவீரட்டானத்து அமர்ந்திருக்கும் இறைவரின் திருவருளால், பாடற்கு இயைந்து அலர்ந்த செந்தமிழின் இனிய சொல்வளம் கொண்ட திருப்பதிக மாலையைப் பாடியருளிய முறையினால், “திருநாவுக்கரசு” என்று உனது பெயர் பலரும் விரும்புமாறு ஏழு உலகங்களிலும் நிலைபெறுவதாகுக! என எல்லார்க்கும் வியப்பு உண்டாகுமாறு மேகம் தவழும் வானில் ஓர் ஒலி எழுந்தது.

திருநாவுக்கரசு நாயனார் புராணம்

இறைவன்: பசுபதீஸ்வரர்

இறைவி: திரிபுரசுந்தரி

அவதாரத் தலம்: திருவாமூர்

முக்தி தலம்: திருப்புகலூர்

குருபூசை நாள்: சித்திரை – சதயம்

[gap height=”80″][gap]
குருபூஜை: திருநாவுக்கரசரின் குருபூஜை சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
“அடியனேன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப்
படியையான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பரமுனிவன்
கடிமலர்மென் சேவடிகள் கைதொழுது குலச் சிறையார்
முடிவில் புகழ்த் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்.”


பாடல் விளக்கம்:-

ஆண்ட அரசின் வரலாற்றை, அம்முனிவர் பெருமானின் மணமுடைய மலர் என மென்மையான சிவந்த திருவடிகளைக் கையாரத் தொழுது அத்துணையினால் அவருடைய அடியவனாகிய யான் அறிந்த வகையால் எடுத்துரைத்தேன். அம்மேலான முனிவரின் மணமுடைய மலர் போன்ற மென்மையான திருவடிகளைக் கையாரத் தொழுது, இனிக் குலச்சிறை நாயனாரின் அளவற்ற பெருமையுடைய திருத்தொண்டின் செயற்றிறனைச் சொல்லத் தொடங்குகின்றேன்.