தமிழகத்தில் இருந்து 36 அகதிகள் இலங்கை திரும்பினர்!!

994

SL

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த 36பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான பேரவையின் உதவியுடன் அவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக இலங்கை வந்தனர்.

குறித்த அனைவரும், வவுனியா, கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

இவர்களில் 20 ஆண்களும் 16 பெண்களும் அடங்கியிருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கான நிதியுதவியை ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் பேரவை செய்திருந்தது.