சீனியின் விலை மேலும் உயர்வு!!

644

Sugar

சீனியின் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றைய தினம் கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ சீனியின் விலை 115 ரூபாவாக காணப்பட்டது.

இதன்படி ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 122 ரூபா முதல் 125 ரூபா வரையில் காணப்பட்டது.

இதேவேளை, ஒரு கிலோ சீனிக்கு அரசாங்கம் தற்போது 30 ரூபா வரியை அறவீடு செய்கின்றது என தெரிவிக்கப்படுகிறது.