எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!!

735

 

tumblr_mr401xBhDP1s2uxt9o1_500

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பதற்கு அரசுதீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 8ரூபாவிலிருந்து 9 ரூபாய் வரையும், அதிலிருந்து ஆரம்பிக்கும் கட்டணங்கள் 6 வீதத்தால் அதிகரிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டணங்களின் தேசிய கொள்கைகள் கணக்கீட்டு மதிப்பீடுகளுக்கு அமைய பேருந்து கடடனங்களின் திருத்தமானது 3.2 வீதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த 3.2வீதமான கட்டணங்கள் திருத்தத்தின் குறைந்த கட்டண அறவீடுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாத காரணத்தினால் இதனை நிராகரித்துள்ளதாக பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கட்டணங்களை 6வீதமாக அதிகரித்துள்ளதாகவும், மிகவும் குறைந்தளவு கட்டணங்களை 1 ரூபாவால் அதிகரிப்பதற்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.