சிறுநீர் கழித்த குழந்தையை எரிகின்ற தீயில் வாட்டிய தந்தை: அதிர்ச்சி வீடியோ!!

454

FullSizeRender-2.width-1024

தென் அமெரிக்க நாடான பராகுவேயில் படுக்கையில் சிறுநீர் கழித்த சிறு வயது குழந்தையை, தீயில் வாட்டி தண்டனை கொடுத்துள்ள தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிம்பியோ நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 20 வயது மதிக்கத்தக்க நபரின் சிறுவயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளான்.

இதனால் கோபம் கொண்ட தந்தை, விறகு குச்சிகளை போட்டு தீயை மூட்டியுள்ளனர், அதன் பிறகு நிர்வாணமாக இருக்கும் தனது குழந்தையை கையில் தூக்கிவைத்துக்கொண்டு, எரிகின்ற தீயில் வாட்டி, இனிமேல் படுக்கையில் சிறுநீர் கழிப்பாயா? என கேட்டு மிரட்டுகிறார். அச்சிறுவனும் நான் இனிமேல் அப்படி செய்யமாட்டேன் என கூறுகிறார், இதில் அச்சிறுவனின் உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது, தந்தையின் இச்செயலை அருகில் வசிப்பவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

மேலும் அந்நபரின் காட்டுமிராண்டித்தனமான செயலால் நாங்கள் அச்சமடைந்ததால், அருகில் செல்லவில்லை என கூறியுள்ளனர். இக்குற்றத்திற்காக அந்நபரை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் பதில் எதுவும் கூற மறுத்துள்ளார், மேலும் நான் ஒன்றும் செய்யவில்லை என்ற வார்த்தையை மட்டும் கூறியுள்ளார்.



மேலும், இந்நபர் அச்சிறுவனின் வளர்ப்பு தந்தை எனவும் தெரியவந்துள்ளது, தாயார் கர்ப்பமாக உள்ளார், தற்போது இந்நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தீயால் காயமடைந்த சிறுவன், குழந்தைகள் Paediatric மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.