சிவனுக்கு குழந்தை பெற்றேன்-கடவுள்கள் என்னை தேடி வருகின்றனர்: மொடல் அழகி போட்ட குண்டு!!

548

sofia-hayat-7592
மும்பையை சேர்ந்த பிரபல மொடல் அழகியான சோபியா ஹயத் தற்போது ஆன்மீகத்தில் ஐக்கியமாகியுள்ளார்.படு கவர்ச்சி மொடல், கிசுகிசுக்கள் என உலாவந்த இவர், தற்போது அவற்றையெல்லாம் கைவிட்டு விட்டு, கன்னியாஸ்திரியாக மாறியுள்ளார்.

சமீபத்தில் காசிக்கு போயிருந்த இவர், அவுரங்காபாத்தில் உள்ள கைலாசநார் கோயிலுக்கு சென்று சிவனை வழிபட்டுள்ளார், இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட அவர், ஆன்மிக பாதை எனது வாழ்க்கையை மாற்றிவிட்டது.சிவன் கோயிலுக்கு சென்ற போது என்னுள் புதுவித மாற்றம் ஏற்பட்டது, என்னுள் சிவன் வந்துவிட்டார், அவருக்கு குழந்தை பெற்றது போல உணர்கிறேன்.

கடவுள்கள் அனைவரும் என்னை தேடி வருகிறார்கள், நான் யாராக இருக்கிறேனோ அதுவாகவே மாறிக்கொண்டிருக்கிறேன் என்றும் என்னுள் சிவலிங்கம் இருக்கிறது எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.