30,000 ரூபா மாத வருமானத்தைக் கொண்டவர்களுக்கு இலவச சட்ட உதவிகள்!

841

1 (49)
30,000 ரூபா வரையில் மாத வருமானம் பெற்றுக் கொள்வோருக்கு இலவச சட்ட உதவிகளை வழங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. 30,000 ரூபா வரையில் மாத வருமானத்தைக் கொண்டவர்களுக்கு இலவச அடிப்படையில் சட்ட உதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜிப்ரி அழகரட்னம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் 15,000 ரூபா மாத வருமானம் ஈட்டுவோருக்கு மட்டுமே இலவச சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சலுகை மாதம் 30,000 ரூபா வருமானம் ஈட்டுவோருக்கும் வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, சங்கத்தின் சிரேஸ்ட சட்டத்தரணிகள் சட்ட உதவிகளை ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள் என சங்கத்தின் உப தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.