வெட் வரி தொடர்பில் வியாபார சங்கங்களுடன் கலந்துரையாடவுள்ள ஜனாதிபதி!!

448

1 (68)
வெட் வரி அதிகரிப்பு தொடர்பில் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும்வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டங்களை கவனத்திற் கொண்டு நாடளாவிய ரீதியல் உள்ளவர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றை இன்று மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த கலந்தரையாடல் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது வெட் வரி திருத்தம், மற்றும் 11வீதம் தொடக்கம் 15 வீதம் வரைஅதிகரிக்கப்பட்ட வெட் வரியினால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதோடு, இந்த கலந்துரையாடல் நிகழ்வின் போது நிதி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துக்கொள்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது.