
ஜேர்மனி நாட்டில் இஸ்லாமிய பெண் ஒருவரை நபர் ஒருவர் சரமாரியாக தாக்கி மூக்கை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள கியல் என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் நகரில் உள்ள வீதி ஒன்றில் 35 வயதான பெண் ஒருவர் இஸ்லாமியர்கள் அணியுடன் உடையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவருக்கு எதிர் திசையில் இருந்து வந்த 55 வயதான நபர் ஒருவர் பெண்ணை திடீரென தடுத்தி நிறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வின் அதிர்ச்சியில் இருந்து பெண் மீளாது உள்ள நிலையில், அவர் சரமாரியாக பெண்ணை தாக்க தொடங்கியுள்ளார். ஒரு குத்து சண்டை வீரர் தனது எதிராளியை தாக்குவது போல் அடித்ததில் பெண்ணின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. தாக்குதல் குறித்து தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் பேசியபோது, ‘பெண் மீது தாக்குதல் தொடங்கியபோது, இஸ்லாமியர்களை பற்றி அவர் தரக்குறைவாக பேசியவாறு தாக்கியதாக’ தெரிவித்தனர்.தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபர் மீது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் மீதான மதவெறி தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவது அந்நாட்டு அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.





