சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ராம்குமாரை பொலிசார் கைது செய்ய சென்ற போது பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் தீவிர சிகிச்சை அளித்த பொலிசார் நீதிமன்ற உத்தரவின் பேரில், புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
புழல் சிறையில் கைதிகளாக உள்ள நோயாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை வாட்டில் தனி அறையில் ராம்குமார் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு யாருடனும் பேசாமல் மன இறுக்கத்தில் இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் ராம்குமார் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிக்கலாம் என கருதிய பொலிசார், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ராம்குமார் தங்கி இருக்கும் அறையில் அவருடன் 2 பொலிசார் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் தூங்காமல் ராம்குமாரையே கண்காணிக்கிறார்கள்.
சிறைக் கைதிகள் எந்த மாதிரியெல்லாம் தற்கொலை செய்வார்கள் என்பது பற்றி இரண்டு பொலிசாருக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மேலும் இரண்டு பொலிசார் அந்த அறைக்கு வெளியே அமர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






