வட்ஸ் அப்பில் மட்டுமல்ல – இப்போது பேஸ்புக்கிலும்!!

506

WhatsApp-vs-Facebook-Messenger
ஒருவர் அனுப்பிய தகவல்களை பெறுபவர் மட்டுமே பாதுக்காப்பாக படிக்கும் வசதியான “encrypted chats” வட்ஸ் அப்பிள்  மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.சமீபத்தில் வட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக “encrypted chats” என்னும் வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த வசதியால் தகவல்களை அனுப்பியவர், அதனை பெறுபவர் மட்டுமே அதனை படிக்க முடியும்.

இதனால் இந்த encrypted வசதி சமூகவிரோத செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறி வட்ஸ் அப்புக்கு  தடைவிதிக்க வேண்டும் என்று வழக்கு போடப்பட்டது.இந்த நிலையில் வட்ஸ் அப்பில்  பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ”encrypted chats” வசதியை பேஸ்புக் நிறுவனம் தனது Messenger அப்பில்  அறிமுகப்படுத்த உள்ளது.இதற்கான சோதனையை தொடங்கிவிட்ட பேஸ்புக் நிறுவனம் விரைவில் இந்த வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.