யாழ். – வெள்ளவத்தை புதிய இலங்கை போக்குவரத்து பஸ் சேவை நாளை மறுநாள் ஆரம்பம்!!

536

z_p08-Workers’-02
இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ் சாலையும் ஹோமாகம சாலையும் இணைந்து வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பஸ் சேவை யொன்றை எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பிக்கவுள்ளன.இச் சேவை தினமும் வெள்ளவத்தையில் இருந்து இரவு 7 மணிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் இரவு 10 மணிக்கும் நடைபெறும்.இப் பஸ் யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், புத்தளம் வீதி ஊடாக சேவையில் ஈடுபடும்.

இச் சேவைக்கான ஆசன முற்பதிவுகளை யாழ். மத்திய பஸ் நிலையத்திலும், கொழும்பு, வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலும் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சாலை முகாமையாளர் தெரிவித்தார்.