வியாபார பொருளாக மாறிய குழந்தை: பயணிகள் ரயிலில் நடந்த கொடுமை!!

543

Baby-1
தமிழகத்தில் ரயிலில் குழந்தையை விற்க முயன்ற இரண்டு பெண்களை கைது செய்த கோவை ரயில்வே பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வாடிப்பட்டியை சேர்ந்த ராணி மற்றும் சேலத்தை சேர்ந்த சாந்தி என்ற இரண்டு பெண்கள் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை விற்க முயற்சி செய்துள்ளனர்.

அதன் விவரம் பின்வருமாரு, ஈரோட்டில் இருந்து கேரளா செல்லும் பயணிகள் ரயிலில் தங்கள் வைத்திருந்த குழந்தையை பயணிகள் சிலரிடம் விற்க முயற்சி செய்துள்ளனர், இதை அறிந்த பயணிகள் சிலர் கோவை ரயில்வே பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து கோவை ரயில் நிலையத்தில் பொலிசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் போது, சாந்தியின் மகளான ஷாலினிக்கு குழந்தை இல்லாததால் குழந்தையை விலைக்கு வாங்கவோ, தத்தெடுக்கவோ முயற்சி செய்து வந்துள்ளார், இந்நிலையில் திருச்சூரை சேர்ந்த சம்சீலா என்பவருக்கு கடந்த 8ம் திகதி பெண் குழந்தை பிறந்துள்ளது.இந்த குழந்தையை இடைத்தரகர் மம்மூட்டிகாகா என்பவர் மூலம் சாந்தி வாங்கியுள்ளார், இதற்காக எந்தவித சட்டநடவடிக்கைகளையும் பின்பற்றவில்லை.

இதனால் பிரச்சனை வரும் என்பதை அறிந்துகொண்ட சாந்தி, மீண்டும் சம்சீலாவிடம் குழந்தையை கொடுக்க சென்றுள்ளனர்.அப்போது ரயிலில் செல்லும் பயணிகளிடமே குழந்தை விற்க முயற்சி செய்துள்ளனர், இந்த முயற்சி பலனலிக்காதலால் சிக்கி கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது.