வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் நடைபவணி இன்று (16.07.2016) காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகியது.
சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமான நடைபவனி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை வந்தடைந்து அங்கிருந்து A9 வீதி ஊடாக மணிக்கூட்டு கோபுரச் சந்தியை அடைந்து பின்னர் பசார் வீதியின் ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தான வீதி ஊடாக இலுப்பையடி, வைத்தியசாலை கடந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அணி புதிய பேருந்து தரிப்பிடத்தின் ஊடாக தாண்டிக்குளம் சந்தியை வந்தடைந்தது.
சமநேரத்தில் பழைய மாணவர்களின் உந்துருளிப் பவனி மன்னார் வீதி ஊடாக குருமண்காடு காளிகோவிலை அடைந்து கோவில் வீதி ஊடாக தாண்டிக்குளம் சந்தியை அடைந்து ஒன்றிணைந்து வீதி ஊடாக பாடசாலையை வந்தடைந்தது.
பாடசாலை அதிபர் ச.சுபாஷ்கரன் தலைமையில் நடைபெற்ற நடைபவணியில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்கள் இ.இந்திரராஜா, துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.
இன் நடைபவனியில் பாடசாலையின் வரலாற்றை சித்தரிக்கும் பதாதைகளை மாணவர்களால் எடுத்துச் செல்லப்பட்டதுடன், தமிழரின் பாரம்பரிய கலாச்சார கண்கவர் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
-படங்கள் சுகுமார்-


































