வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்..!!

735

ACCIDENT_logo

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்துள்ளார்.

புளியங்குளத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இதன்போது பலியானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய லொரி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.