மாத்தறை, தேவாலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறிய பிள்ளை ஒன்று உயிரிழந்துள்ளது.
வீட்டிலிருந்த கொங்ரீட் ஒன்று உடைந்து கழுத்தில் விழுந்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்திருப்பது 08 வயதுடைய சிறுமி என்று வைத்தியசாலையில் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
மூளையின் உட்பகுதியில் இரத்தம் கசிந்துள்ளமையே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று அந்த பேச்சாளர் மேலும் கூறினார்.
சம்பவம் தொடர்பில் ஹக்மன பொவிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






