வர்த்தகர்களைக் கண்காணிக்க 200 புலனாய்வாளர்கள் களத்தில்!!

494

store_2199250f
கட்டுப்பாட்டு விலைக்கு அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யாத வர்த்தக நிலையங்களை சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் 200 புலனாய்வு உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.டி.டி.டி. அரந்தர தெரிவித்துள்ளார்.நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டச் செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும், இவர்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்தவுடன் சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யாத வியாபாரிகளையும் வர்த்தக நிலையங்கள் குறித்தும் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு எந்தவொரு தொலைபேசியிலிருந்தும் அறிவித்து முறைப்பாடு செய்ய முடியும்.இதேவேளை,சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்கள் பயணிக்கும் வாகனங்களில் ஜி.பி.எஸ். தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டிருப்பதால், தலைமையகத்திலிருந்தே நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு அதிகாரசபை உரிய நட வடிக்கை எடுத்துள்ளது என்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.