இரத்தினபுரியில் தாய், மகள் படுகொலைச் சம்பவம்! சந்தேக நபர் கைது!!

590

arrest (1)

இரத்தினபுரியில் வேவல்வத்த தோட்டத்தில் தாய் மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வேவல்வத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரஞ்சித் மனிபுர உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கொலையுண்ட லெச்சுமி சசிகலா என்ற 37 வயதான பெண்ணின், கள்ளக் காதலனான 43 வயதான ஆணகவுண்டர் பாலகிருஸ்ணன் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் ஓர் தோட்டத்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற போதிலும், உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளின் பின்னர் பிரதேசத்தில் சஞ்சரிப்பதாக பிரதேச மக்கள் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.சந்தேக நபர், கொலையுண்டர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு அடிக்கடி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேவல்வத்த பலங்கொட வீதியில் லொறி ஒன்றை மறித்து அதில் ஏறிய இனந்தெரியாத நபர் பற்றி பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்திய சோதனையின் போது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரி நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.