6 வயதுச் சிறுவன் அடித்துக் கொலை!!

596

625.0.560.320.500.400.194.800.668.160.90
ஹைதராபாத்தில் சக மாணவர் ஒருவன் தாக்கியதில் 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்தவர் அப்துல் மஜித் கார். இவர் கார் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவரது மகன் இப்ராகிம். இவனுக்கு 6 வயதாகிறது. இவன் ஐ.ஏ.எஸ். காலனியில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் கடந்த 12ம் திகதி பள்ளிக்கு சென்ற இப்ராகிமை மதிய உணவு இடைவேளை நேரத்தில் 3ம் வகுப்பு மாணவன் ஒருவன் பயங்கரமாக தாக்கியுள்ளான்.இதில் இப்ராகிமுக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரது இடுப்பு, வயிறு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சக மாணவர் தாக்கியதை ஆசிரியரிடம் இப்ராகிம் கூறாமல், மாலையில் வீட்டிற்கு சென்றதும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். அவன் பலத்த காயமடைந்து இருப்பதை பார்த்த பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள நில்லோபர் மருத்துவமனையில் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

அவனை பரிசோதித்த மருத்துவர்கள், வயிறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.இதையடுத்து சிறுவனுக்கு இரு அறுவை சிகிச்சை செய்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இப்ராகிம் பரிதாபமாக உயிரிழந்தான்.இதுகுறித்து பொலிசார் சிறுவனின் தந்தை அப்துல் முஜீப், பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.