பச்சிளம் குழந்தையை தெருவில் வீசி சென்ற கொடூர பெற்றோர்: நாய்களுக்கு உணவான பரிதாபம்!!

554

dog-saves-baby
சென்னையில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை சாலையோரத்தில் வீசிச் சென்ற இரக்கமற்ற பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.சென்னை தாம்பரம் அருகேயுள்ள சிட்லபாக்கத்தில் கடந்த 11ம் திகதி பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங் குழந்தையின் உடல் துப்பட்டாவால் சுற்றப்பட்ட நிலையில் சாலையோரத்தில் கிடந்தது.

அந்தக் குழந்தையின் உடல் உறுப்புகளை நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார், இறந்த நிலையில் சிதைந்து போய் கிடந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார், குழந்தையை சாலையில் வீசிச்சென்றது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சிட்லபாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரியும் ராம் பகதூர் (26), அவரது மனைவி சாந்தி(25) ஆகியோர் தான் குழந்தையை தெருவில் வீசிச் சென்றுள்ளனர்.ராம் பகதூருக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் தனக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால், குழந்தையை ரோட்டில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோர்கள் இரக்கமற்ற நிலையில் சாலையில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.