பியர் போத்தல்களுடன் இந்திய வீரர்கள் : சர்ச்சையின் ஆரம்பம்!!

433

India Team

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் 21ம் திகதி தொடங்குகிறது. இதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடி விட்டது.

இந்த தொடருக்கான இந்தியா அணி கடந்த 6ம் திகதி இந்தியாவில் இருந்து புறப்பட்டது. தலைமை பயிற்சியாளரான அனில் கும்ப்ளே வீரர்களுக்கு அதிக அளவு நெருக்கடி கொடுக்காமல் சுதந்திரமாக விட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் மிகச்சிறந்த சுற்றுலா தளம் என்பதால் வீரர்கள் கடற்கரையில் பீச் வொலிபோல், கடலில் டைவிங் என பொழுதை சந்தோசமாக கழித்து வருகின்றனர்.

ஆனால் இந்த பொழுதுபோக்கு அளவுக்கு அதிகமாகிவிட்டது. மேற்கிந்திய தீவுகள் என்றாலே பியர் போத்தல்களுடன் கடற்கரையில் பொழுது போக்குவது பிரபலம். அந்த பழக்கம் இந்திய வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் பியர் போத்தல்களுடன் சுற்றியுள்ளனர். அத்தோடு மட்டுமல்ல, அதை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளர்.

இந்த படம் குறித்த விவகாரம் பி.சி.சி.ஐ. யின் கவனத்திற்கு தெரியவந்தது. உடனடியாக, அணியின் முகாமையாளர் ரியாஸ் பவான் மூலம் வீரர்களுக்கு அறிவுரை கூற வலியுறுத்தியது. அப்போது வீரர்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என்ற வலியுறுத்த கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

வீரர்கள் வெளியிட்டுள்ள படத்தில் லோகேஷ் ராகுல், உமேஷ் யாதவ் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி உள்ளனர். ஆனால் படம் குறித்த எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. ‘‘இதுபோன்ற படங்களை வெளியிட்டு மோசமான உதாரணமாக இருக்கக்கூடாது என்று முகாமையாளர் கேட்டுக்கொண்டதாக பி.சி.சி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கும் ஏராளமான குழந்தைகள் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவர்களுக்கு பிடித்த வீரர்களின் செயல்பாடுகளை அப்படியே பின்தொடர் விரும்புவார்கள். ஆகவே, இதை மனதில் கொண்டு வீரர்கள் செயல்பட வேண்டும். ரசிகர்களின் உணர்வுகளை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.