இணுவையூர் சக்திதாசன் எழுதிய தொட்டுவிடும் தூரத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று(17.07.2016) மாலை 4.00 மணியளவில் வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் வவுனியா கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் வீ.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியதுடன் ‘தொட்டு விடும் தூரத்தில்’ கவிதை நூலை வெளியிட்டு வைத்ததுடன் முதற்பிரதியை வவுனியா அறிவாலயம் புத்தகசாலை உரிமையாளர் ஜெ.கோபிநந்தன் பெற்றுக்கொண்டார்.
வரவேற்புரை செல்வி ஜெசிதா ஆனந்தமூர்த்தி நிகழ்த்தியதுடன் நூலாசிரியர் அறிமுகவுரை வே.முல்லைதீபன் அவர்களும் நிகழ்த்தினர்.
நயப்புரை முல்லைத்தீவு மேலதிக காணிப்பதிவாளர் ஜெகதீசன் கோபிநாத் அவர்களும் கவியுரையை கலைஞர் மாணிக்கம் ஜெகன் அவர்களும் ஏற்புரையை நூலாசிரியர் இணுவையூர் சக்திதாசன் வழங்கினார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் மணி கே.கே. அருந்தவராஜா, வவுனியா தேசிய கல்வியல் கல்லூரி விரிவுரையாளர் வித்தியாரத்னா நா.பார்த்தீபன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம் அதிபர் மதுரக் குரலோன் சி.நாகேந்திரராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.













