பாரியளவில் போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து விநியோகிக்கும் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் வழங்கிய தகவலுக்கு அமையவே இந்தக் குற்றச்செயல் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணை போலியான கடவுச்சீட்டுடன் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி கட்டுநாயக்க விமான நிலையத்தில் அண்மையில் கைது செய்தனர்.
இந்த பெண் வழங்கிய தகவலுக்கு அமைய அம்பாறை பிரதேசத்தில் மற்றுமொரு சந்தேகநபர் 28 போலி கடவுச்சீட்டுகளுடன் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து கொட்டிகாவத்தை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 70 போலி கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.








