காதலிக்க வற்புறுத்திய இளைஞன் : மாணவி எடுத்த விபரீத முடிவு!!

553

Love Torcher

தமிழகத்தில் பன்னிரென்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் வனிதா, இவருடைய மகள் அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். ராசிபுரத்தை சேர்ந்த சுரேஷ்(21) என்பவர் அம்மாணவியை திருமணம் செய்து கொள்ளுமாறு கடந்த ஆறு மாத காலமாக தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் வைக்கப்பட்டிருந்த நச்சுமருந்தை குடித்து பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் திடீரென மயங்கி விழவே, அருகில் உள்ள ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து மாணவி கூறியதாவது, நான் என்னுடைய பெரியம்மா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தேன். அப்போது பள்ளி அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் அமர்ந்து கொண்டு சுரேஷ் எனக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

மேலும் அவரிடம் படிப்பு தான் முக்கியம் என்று கூறியும், தொடர்ந்து தொல்லை கொடுத்து கொண்டே வந்தார். இதனால் செய்வதறியாமல் விஷம் குடித்து விட்டேன் என கூறியுள்ளார்.

பொலிசார் விசாரணையில் அவர் திருமணம் செய்ய வற்புறுத்தியதாக தெரியவந்துள்ளது, இதனால் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.