வவுனியா பாவற்குளம் படிவம் 1 இல் வசிக்கும் திருமதி ச.கமலாதேவி தனது ஒரே மகளை 2009.02.28 முதல் காணாமல் போய் இன்னும் தேடிக்கொண்டு இருக்கும் ஒரு தாயாவார்.
தனது மகளான ச.சதாநந்தினி காணாமல் போன நாள் முதல் மனதளவில் பாதிக்கப்பட்ட அவர் தனது மனக் கவலையை போக்க வவுனியாவின் ஒவ்வொரு கிராமமாக சென்று கஷ்டப்படும் மக்களை சந்தித்து ஆறுதல்ப்படுத்தி அவர்களுக்கான உதவிகளை சமூக நிறுவனங்கள் மூலமாக பெற்று கொடுத்து, தன் மனதுக்கும் ஆறுதலை உருவாக்கி கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு கண்ணில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரவே தமிழ் விருட் சம் ஊடாக கனடாவில் இயங்கி வரும் ராம் பவுண்டேசனுக்கு தனது நிலையை தெரியப்படுத்தினார்.
அவரது நிலையை உணர்ந்த ராம் பவுண்டேசன் அவருக்கு தேவையான மருந்துகள், இலவச சத்திர சிகிச்சை யாழ்பாணத்தில் நடைபெற இருப்பதால் போக்குவரத்து செலவு உட்பட சகல செலவுகளுக்குமான பணம் என்பவற்றை கடந்த 16.07.2016 அன்று வழங்கினர்.
ராம் பவுண்டேசனின் இந்த உதவிகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் வழங்கி வைத்தனர் .
ராம் பவுண்டேசனுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து அந்த உதவிகளை திருமதி ச.கமலாதேவி பெற்று கொண்டார்.













