
ஜதராபாத்தில் சிறுவர்கள் எட்டு பேர் சேர்ந்து மூன்று நாய்க் குட்டிகளை உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜதராபத்தில் உள்ள வஜீர் சுடுகாட்டுப் பகுதியில் கடந்த 16ம் திகதி சிறுவர்கள் எட்டு பேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒன்றாக சேர்ந்து மூன்று நாய்க் குட்டிகளை உயிருடன் எரித்துக் கொல்வது போன்ற வீடியோ வெளியானது. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவவே, அந்த காட்சிகளை ஆதாரமாக வைத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் சிறுவர்களை கைது செய்தனர்.
12 முதல் 17 வயது வரை உள்ள அவர்களில் 5 பேர் மாணவர்கள், 3 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் ஆகஸ்ட் 2ம் திகதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.அவர்கள் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்று நாய்க் குட்டிகளும் விடாமல் குரைத்துக் கொண்டே இருந்தது.அந்த சத்தம் மிகவும் எரிச்சலூட்டியது, தொந்தரவாக இருந்ததால் விளையாட முடியவில்லை, எனவே கோபத்தில் தீயை மூட்டி நாய்க் குட்டிகளை கொன்றதாக தெரிவித்துள்ளனர்.





