வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இருந்து தேசியமட்டம் சென்று தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட பாவோதல் நிகழ்ச்சியில் பங்குபற்றி 1ம் பிரிவில் 1ம் இடத்தை சசிக்குமார் தர்மிதா பெற்றுக்கொண்டார்.
இதன்மூலம் இவர் தனக்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்தது
மட்டுமல்லாது நகரப்புறப் பாடசாலைகளுக்கு சவாலாக கிராமப்புறப் பாடசாலை மாணவர்களினாலும் சாதிக்கமுடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
இவருக்கும் இவரை வழிப்படுத்திய அதிபர் ஆசியைகளுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனது வாழ்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தொடர்புபட்ட செய்தி : வவுனியா கிடாச்சூரி மாணவி தேசிய ரீதியில் தமிழ்த்தினப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை!!











