வெளிநாட்டில் இரட்டைச் சதமடித்த முதல் இந்திய அணித் தலைவரானார் கோலி!!

277

Kholi

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 ஆவது நாளில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. அணித் தலைவர் விராட் கோலி அபாரமாக ஆடி இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் இரட்டைச் சதமடித்ததன் மூலம் வெளிநாட்டு மண்ணில் இரட்டைச் சதமடித்த முதல் இந்திய அணித் தலைவர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

முன்னதாக 1989 இல் ஒக்லண்டில் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முகமது அசாரூதின் 192 ஓட்டங்கள் குவித்ததே இந்திய அணித் தலைவர் ஒருவர் வெளிநாட்டில் எடுத்த அதிகபட்ச ஓட்ட சாதனையாக இருந்தது.

இதுதவிர, மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் இரட்டைச் சதம் கண்ட 3 ஆவது வெளிநாட்டு அணித் தலைவர், 27 வயதில் மேற்கிந்தியத் தீவுகளில் இரட்டைச் சதமடித்த இளம் அணித் தலைவர் என்ற பெருமைகளும் கோலிக்குக் கிடைத்துள்ளன.