அஷ்வின் சுழலில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் : இன்னிங்ஸ் வெற்றிப்பெற்ற இந்தியா!!

429

India's bowler Ravichandran Ashwin center celebrates with teammates after he bowled out West Indies' Marlon Samuels during day four of their first cricket Test match at the Sir Vivian Richards Stadium in North Sound, Antigua, Sunday, July 24, 2016. (AP Photo/Ricardo Mazalan)

மேற்கிந்திய தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றிப்பெற்று அசத்தியுள்ளது.

தமிழக வீரர் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி இரண்டாவது இன்னிங்சில் மட்டும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விவி ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் கடந்த 21ம் திகதி தொடங்கியது.

இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 566 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, உமேஷ் யாதவ் மிராட்ட, முதல் இன்னிங்சில் 243 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, பாலோ ஒன் பெற்றது மேற்கிந்ததிய தீவுகள்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய மேற்கிந்திய தீவுகள், மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ஓட்டங்கள் எடுத்தது.

நான்காவது நாள், தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய மேற்கிந்திய தீவுகள், 231 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.

இதன் மூலம் இந்திய அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது. தற்போது 4 போட்டிகள் டெஸ்ட கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்நிலைபெற்றுள்ளது.