இணையத்தள பயன்பாட்டில் 3ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா!!

524

internet

இணையதள பயன்பாட்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகத்தில் அதிகமாக இணையதளம் பயன்படுத்துவோர் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 31 சதவீதம் உயர்ந்து தற்போது 73.9 மில்லியன் பயன்பாட்டாளர்கள் என்ற அளவை எட்டியுள்ளது.

இணையதள பயன்பாட்டில் சீனா 348.2 மில்லியன் என்ற எண்ணிக்கையோடு முதல் இடத்திலும், அமெரிக்கா 191.4 மில்லியன் என்ற எண்ணிக்கையை பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இணையதள பயன்பாட்டில் அதிக வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில், பிரேசில் 37சதவீதமாக முதல் இடத்திலும், இந்தியா 31 சதவீதம் என்ற நிலையில் 2வது இடத்திலும் உள்ளது.