117 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி!!

432

Sri Lanka's Dinesh Chandimal (L) plays a shot past Australia's wicketkeeper Peter Nevill during the first day of the opening Test cricket match between Sri Lanka and Australia at The Pallekele International Cricket Stadium in Pallekele on July 26, 2016. / AFP / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 34.2 ஓவர்களுக்கு மாத்திரமே தாக்குப் பிடித்து, 117 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது.

இதன்படி இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, இன்று கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி சார்பாக, துடுப்பாட்ட வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்காத நிலையில், நடு வரிசை வீரரான தனஞ்சய டி சில்வா அதிகபட்சமாக 24 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

ஏனைய வீரர்கள் அதனை விடக் குறைவான ஓட்டத்தைப் பெற்ற நிலையில் வௌியேற, 34.2 ஓவர்களுக்கு மாத்திரமே தாக்குப் பிடித்த இலங்கை, 117 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேஸில்வுட் (josh Hazlewood), மற்றும் நாதன் லயன் (Nathan Lyon) தலா மூன்று விக்கெட்டுக்களையும், மிச்சல் ஸ்ராக் (Mitchell Starc) மற்றும் ஸ்டீவ் ஒ´கீஃபெ (Steve O´Keefe) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.

இதன்படி அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 66 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளை இழந்திருந்தபோது முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.